மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
903 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
903 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
903 days ago
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ நடிப்பில் வெளிவந்த விடுதலை திரைப்படம் தமிழில் அமோக வரவேற்பை பெற்றது. தெலுங்கில் இந்தப்படம் வரும் ஏப்ரல் 15 அன்று டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. அதற்காக இன்று விடுதலை செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் வெற்றிமாறன்.
இந்த நிகழ்ச்சியில் அவர் கூறியது; ஆடுகளம் படத்திற்கு பிறகு வடசென்னை படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க நடிகர் அல்லு அர்ஜுனை சந்தித்தேன். ஆனால் ஒரு சில காரணங்களால் அப்படத்தில் அவர் நடிக்கவில்லை. அந்த கதாபாத்திரத்தையும் நான் நீக்கி விட்டேன்.
கொரோனோ லாக்டவுன் காலகட்டத்தில் மகேஷ் பாபுவுடன் நிறைய கதைகள் பேசினேன். அது எதுவும் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை. நான் ஸ்டார்க்காகவோ காம்பினேஷன்காக படம் பண்ண மாட்டேன். கதைக்காக படம் பண்ணுவேன். நான் யோசித்த கதைகளில் ஒரு கதையில் ஜூனியர் என்டிஆர் மாதிரி ஸ்டார் தேவைப்படுகிறது. இப்போது ஜூனியர் என்டிஆர் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கண்டிப்பாக படம் பண்ணுவேன். ஆனால் அதற்கு நேரம் ஆகும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
903 days ago
903 days ago
903 days ago