சேனாபதியின் சேனை : கமல் வெளியிட்ட புகைப்படம்
ADDED : 919 days ago
ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு நடித்து வருகிறார் கமல். கடந்த சில தினங்களுக்கு முன்பாக தைவான் நாட்டில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். இதை தொடர்ந்து தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக தென் ஆப்பிரிக்காவில் இறங்கி உள்ளது இந்தியன் 2 படக்குழு.
இந்த நிலையில் கமல் தற்போது தனது அலங்கார நிபுணர் அம்ரிதா ராம் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சிலருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இதுதான் சேனாபதியின் சேனை என்றும் அவர்களை தன் படை வீரர்களாக குறிப்பிட்டுள்ளார் கமல். இந்தியன் படத்தில் கமல் சேனாபதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.