இணையத்தில் ஜவான் படத்தின் காட்சி லீக்... அதிர்ச்சியில் படக்குழு!!
ADDED : 905 days ago
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து தனது ரெட் சில்லிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வரும் படம் ஜவான். இதை இயக்குனர் அட்லீ இயக்குகிறார். நயன்தாரா, பிரியாமணி , விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் ஜவான் படத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடித்த பாடல் காட்சியொன்றை மும்பையில் படமாக்கினர். சொகுசு படகில் இந்த காட்சி படமாக்கப்பட்டது. படகின் மேற்பகுதியில் நின்று இருவரும் நடனம் ஆடி நடித்தனர். இதை யாரோ திருட்டுத்தனமாக வீடியோவாக படம்பிடித்து இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளார்.
இப்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. முக்கிய பாடல் காட்சிகள் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.