உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குறட்டை பிரச்சினையால் தவிக்கும் நாயகன்: 'குட்நைட்' பட அப்டேட்

குறட்டை பிரச்சினையால் தவிக்கும் நாயகன்: 'குட்நைட்' பட அப்டேட்

காலா, ஜெய்பீம் படங்களில் நடித்துள்ள மணிகண்டன் அடுத்ததாக நடித்துள்ள படம் 'குட் நைட்'. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தில், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பக்ஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தூங்கும்போது குறட்டை விடும் பழக்கம் கொண்ட நாயகன் தன் வாழ்நாளில் சந்திக்கும் பிரச்சினைகளை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. நாயகனின் குறட்டை பிரச்சினையால் வேலை பறிபோகிறது, காதல் கைகூடாமல் போகிறது. அதனை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதை காமெடியாக சொல்லும் படமாக உருவாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !