மார்க் ஆண்டனி படத்தை முடித்த எஸ்.ஜே.சூர்யா
ADDED : 909 days ago
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரிது வர்மா ஆகியோர் நடித்து வரும் படம் மார்க் ஆண்டனி. ஜி. வி .பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த நிலையில் தற்போது மார்க் ஆண்டனி படத்தில் தனக்கான காட்சிகளில் நடித்து முடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இதை அடுத்து அவருக்கு கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்து படக்குழு வழியனுப்பி வைத்திருக்கிறார்கள். இதுகுறித்த வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர்.