ஆருத்ரா மோசடியில் 35 லட்சத்தை இழந்த சீரியல் நடிகர்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா தொடரில் காமெடி ரோலில் நடித்திருந்தார் சந்திரன். தற்போது மலர் தொடரில் நடித்து வருகிறார். அதிக வட்டி கிடைக்கும் என்ற ஆசையால் ஆருத்ரா நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்த சந்திரன் ரூ.35 லட்சத்தை இழந்துள்ளார். முதலில் வைஷ்ணவி தான் 25 ஆயிரம் ரூபாயை ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். அதற்கு ஒழுங்காக பணம் வரவே கடன் வாங்கி ஒரு பெரிய தொகையை முதலீடு செய்துள்ளார். அவரைப்போலவே சந்திரனும் தனது வீட்டை அடமானம் வைத்து ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார். ஆனால், அதற்கு அடுத்தமாதமே பணம் வருவது நின்றுவிட்டது. கடந்த செப்டம்பரில் தான் சந்திரனுக்கும் வைஷ்ணவிக்கும் திருமணம் நடந்தது. தற்போது இந்த பிரச்னையால் சொந்த வீட்டிலிருந்த சந்திரன் வாடகை வீட்டிற்கு வந்துவிட்டதாகவும், வாங்கிய கடனை கட்ட முடியாமல் அவதிப்படுவதாகவும் கூறியுள்ளார்.