‛சாகுந்தலம்' சமந்தா போன்று அசத்திய ஹீமா பிந்து
ADDED : 901 days ago
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே தொடரின் மூலம் அறிமுகமான ஹீமா பிந்துவுக்கு சின்னத்திரையில் தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இன்ஸ்டாகிராமிலும் அவர் வெளியிடும் புகைப்படங்களும் லைக்ஸ் குவிந்து வருகிறது. முன்னதாக பொன்னியின் செல்வன் த்ரிஷா லுக்கை ஹீமா பிந்து ரீ-கிரியேட் செய்திருந்தார். அந்த புகைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலா படத்தின் போஸ்டர் லுக்கை ரீ-கிரியேட் போட்டோ வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் சினிமா ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கிறார் என ஹீமா பிந்துவின் அழகை புகழ்ந்து வருகின்றனர்.