மகனின் ஒரு வயது பிறந்தநாளை கொண்டாடிய காஜல் அகர்வால்!
ADDED : 922 days ago
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன்- 2 உட்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். கடந்த 2020 ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வாலுக்கு கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 19ம் தேதி ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நீல் கிச்சலு என்று பெயர் வைத்தார். நேற்று முன்தினம் தனது மகனுக்கு ஒரு வயது பூர்த்தியானதை அடுத்து முதல் பிறந்த நாளை வெகுவாக கொண்டாடிய காஜல் அகர்வால், தனது மகனின் கியூட்டான புகைப்படம் ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். அதற்கு 7 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன.