மீண்டும் கமல் படத்தில் ஆண்ட்ரியா
ADDED : 979 days ago
ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் அடுத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். அந்த வகையில் நாயகன் படத்துக்கு பிறகு மீண்டும் அவர்கள் இருவரும் கூட்டணி அமைக்கிறார்கள். முதன்முறையாக இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது இன்னொரு நாயகியாக ஆண்ட்ரியாவும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு கமல் நடித்த விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 மற்றும் உத்தம வில்லன் ஆகிய மூன்று படங்களில் நடித்துள்ள ஆண்ட்ரியா இந்த படத்தின் மூலம் நான்காவது முறையாக மீண்டும் கமலுடன் இணையப்போகிறாராம்.