உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் ஹிந்தி பட இயக்குனர்

விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் ஹிந்தி பட இயக்குனர்

நடிகர் விஜய் சேதுபதி இப்போது தனது ஐம்பதாவது படமான மகா ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை குரங்கு பொம்மை பட இயக்குநர் நிதிலன் இயக்குகிறார். முக்கிய வேடத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான நட்ராஜ் (எ) நட்டியும் நடிக்கிறார். ஆக்ஷன், ரிவென்ஞ் டிராமாவாக உருவாகி வரும் இந்த படத்தில், இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இந்நிலையில் இதில் பிரபல இந்தி பட இயக்குனர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்தில் வில்லனாக இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் கஷ்யப் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் இதற்கு முன்பு தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !