பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஹிப்ஹாப் ஆதி படம்
ADDED : 941 days ago
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் வீரன். இதையடுத்து பி.டி சார் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் புதிய படம் ஒன்றை ஆதி தயாரித்து இயக்கி, அவரே கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடிகை அனகா நடிக்கிறார்.
ஆதி சினிமா கேரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு வார் என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ப்ளாக் ஸ்குவாட் ஏஜென்ட் கதாபாத்திரத்தில் ஆதி நடிக்கிறார் என கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.