அன்பால தானா சேர்ந்த பிரியாணி: விக்னேஷ் சிவனின் வைரல் பதிவு
ADDED : 907 days ago
உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை நேற்று இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன், ரம்ஜான் அன்று தனது இஸ்லாமிய நண்பர்கள் கொடுத்த பிரியாணிகளை புகைப்படமெடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு, தனது வாழ்த்தையும் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், அன்பால தானா சேர்ந்த பிரியாணி... ரம்ஜான் கொண்டாடும் அனைத்து இனிய நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள். ஈத் முபாரக் என குறிப்பிட்டுள்ளார்.