உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கில் அறிமுகமாகும் லவ் டுடே நாயகி இவானா

தெலுங்கில் அறிமுகமாகும் லவ் டுடே நாயகி இவானா

லவ் டுடே படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை இவானா. இதற்கு முன்பு இவர் நாச்சியார், ஹீரோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பிறகு பிஸியாகி வருகிறார் இவானா. தற்போது தமிழில் தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் எல்ஜிஎம் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவை தொடர்ந்து இப்போது தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார். தயாரிப்பாளர் தில் ராஜூ மற்றும் இயக்குனர் சுகுமார் இருவரும் இணைந்து தயாரிக்கும் செல்பிஸ் படத்தில் கதாநாயகனாக தில் ராஜூவின் உறவினரான ஆசிஷ் நடிக்கிறார். இயக்குனர் காசி விஷால் இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக இவானா நடிக்கிறார் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !