விஜய் பிறந்தநாளில் 68வது படத்தின் அறிவிப்பு : இயக்குனர் யார்?
ADDED : 956 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிஷா நடிக்கிறார். இப்படம் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வரும் நிலையில், விஜய் நடிக்கும் 68வது படத்தை அட்லீ இயக்குவதாக கூறப்பட்டது. அதையடுத்து தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்கப் போவதாக இன்னொரு செய்தி வெளியானது.
தற்போது புதிதாக விஜய்யின் 68வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாகவும், இப்படம் சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கும் நூறாவது படம் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் அறிவிப்பு அவரது பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் அன்றைய தினம் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது அட்லீயா?, கோபிசந்தா?, இல்லை கார்த்திக் சுப்பராஜ்ஜா என்பது தெரிந்துவிடும்.