லால் சலாம் படத்தின் புதிய அப்டேட் வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினி
ADDED : 905 days ago
விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா, செந்தில், தம்பி ராமையா உட்பட பலரது நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினி இயக்கி வரும் படம் லால் சலாம். இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது லால் சலாம் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்து விட்டதாக ஐஸ்வர்யா ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். மேலும் அடுத்து நடைபெற உள்ள இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இப்படத்தில் பணியாற்றியுள்ள முக்கிய நபர்களுக்கு ஒரு விருந்து கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா. அது குறித்த புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார்.