கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பை நிறுத்திய கலெக்டர்
ராக்கி பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. இந்த படத்தில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு குற்றாலம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்புன் போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்கும் வகையிலும், புலிகள் சரணாலயம் அருகே குண்டு வெடிப்பது மாதிரியான காட்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. இது எதுவுமே முறையாக அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதாக தெரிகிறது. அதனால் இன்று மத்தளம் பாறையில் நடைபெற்ற கேப்டன் மில்லர் படப்பிடிப்பை தென்காசி கலெக்டர் நிறுத்தியுள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் இந்த செய்தி வைரலாகி வருகிறது.