உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காதலுக்கு மரியாதை - ஏ.ஆர்.ரஹ்மான் பதிலடி

காதலுக்கு மரியாதை - ஏ.ஆர்.ரஹ்மான் பதிலடி

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவரது மனைவி சாய்ரா பானு கலந்து கொண்டனர். அப்போது மேடையில் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு பேசினார்கள்.

சாய்ரா பானு மேடையில் ஹிந்தியில் பேச தொடங்கினார். அப்போது மனைவியிடம், ஹிந்திக்கு பதிலாக தமிழில் பேசும்படி ஏ.ஆர். ரஹ்மான் கூறினார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் என்னது ஏ.ஆர்.ரஹ்மான் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய்மொழி என்ன? வீட்டுல குடும்பத்துல என்ன பேசுவாங்க? என்று சர்சையாக கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் அவரது டுவிட்டர் பக்கத்தில் கஸ்தூரி கேள்விக்கு காதலுக்கு மரியாதை என்று பதிலளித்துள்ளார். இப்போது நெட்டிசன்கள் இந்த பதிலை பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !