மீண்டும் முதன்மை வேடத்தில் நயன்தாரா, யோகி பாபு
ADDED : 892 days ago
கடந்த 2018ல் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா, நடிகர் யோகி பாபு நடித்து வெளிவந்த திரைப்படம் கோலமாவு கோகிலா. தற்போது மீண்டும் ஒரு படத்தில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, அறிமுக இயக்குனர் விக்கி இயக்கும் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா, யோகி பாபு இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.