வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் ஜோதிகா : வைரலாகும் வீடியோ
ADDED : 904 days ago
36 வயதினிலே படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை ஜோதிகா, தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களாக நடித்து வருகிறார். கடைசியாக சசிகுமார் உடன் உடன்பிறப்பே படத்தில் அவரது தங்கையாக நடித்தார். அடுத்தப்படியாக சில படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஜோதிகா இன்று தனது ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தலைகீழாக நின்றபடி நடிகை ஜோதிகா ஒர்க்கவுட் செய்வதை பார்த்து பல்வேறு இளம் நடிகைகளும் வியந்துபோய் வாவ் என கமென்ட் செய்து வருகின்றனர். 44 வயதிலும் இப்படி வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் ஜோதிகாவை பலரும் பாராட்டி வாராகிறார்கள்.