ரசிகர்களை அழைத்து பாராட்டிய விஜய்
ADDED : 891 days ago
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
சமீபகாலமாக விஜய்யின் ரசிகர்கள் விலையில்லா விருந்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். இதைதொடர்ந்து விஜய் தனது 300க்கும் மேற்பட்ட ரசிகர்களை அழைத்து பாராட்டியுள்ளார் .
அப்போது பண உதவி தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள். நான் உதவி செய்கிறேன் .ஆனால் உணவு வழங்குவதை நிறுத்தாமல் தொடர்ந்து செய்ய வேண்டும் . இன்னும் பல நலத்திட்ட உதவிகளை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அதனை மக்களிடையே கொண்டு சேர்க்க நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் விஜய் கூறியுள்ளார்.