தமிழில் மிரட்ட வரும் விருபாக்சா
ADDED : 890 days ago
இயக்குனர் கார்த்திக் தண்டு இயக்கத்தில் நடிகர் சாய் தரம் தேஜ் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் விருபாக்சா. இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ளார். எஸ். வி. சி. சி நிறுவனத்துடன் இணைந்து இயக்குனர் சுகுமாரின் சுகுமார் ரைட்டிங் நிறுவனமும் தயாரித்துள்ளனர்.
இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி படமாகியுள்ளது. உலகளவில் சுமார் ரூ. 60 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். இப்போது இந்த படத்தை தமிழில் டப் செய்து வெஎளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, இந்த படத்தை வரும் மே 5 அன்று தமிழகமெங்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகின்றனர். இதை அதிகாரப்பூர்வமாக போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.