ஒருவாரத்திற்கு பின் ரூ.150 கோடியை கடந்த சல்மான் கான் படம்
ADDED : 936 days ago
தமிழில் நடிகர் அஜித் குமார் நடித்து சூப்பர் ஹிட் ஆன படம் வீரம். இந்த படத்தை சல்மான் கான் இந்தியில் 'கிஸி கி பாய் கிஸி கி ஜான் 'என்ற பெயரில் ரீமேக் செய்து கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக பூஜா ஹெக்டே மற்றும் முக்கிய வேடத்தில் வெங்கடேஷ் டகுபதி நடித்துள்ளனர் . இப்படம் கடந்தவாரம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியானது.
இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. வசூலில் திணறி வருகிறது. பொதுவாக சல்மான் படம் இரண்டு மூன்று நாட்களில் ரூ.100 கோடி வசூலை கடக்கும் தற்போது ஒரு வாரத்திற்கு மேல் இப்போது தான் உலகளவில் ரூ.151.12 கோடியை கடந்துள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். இருப்பினும் இந்தப்படம் நஷ்டத்திலிருந்து தப்பிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.