'இறுதியாக உனக்கு அமைதி கிடைத்துவிட்டது' : முன்னாள் கணவருக்கு வனிதா இரங்கல்
ADDED : 991 days ago
நடிகை வனிதா விஜயகுமார் கடந்த 2020ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண பஞ்சாயத்து சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதங்களையே கிளப்பியது. ஆனால், முழுதாக ஒருவருடம் கூட இருவரும் சேர்ந்து வாழவில்லை. கருத்துவேறுபாடு காரணமாக பீட்டர் பாலை விட்டு வனிதா பிரிந்துவிட்டார். இந்நிலையில், பீட்டர் பால் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு தனது இரங்கலை பதிவு செய்துள்ள வனிதா, பீட்டர் பாலின் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடாமல், 'கண்டிப்பாக நீ இதைவிட நல்ல இடத்தில் தான் இருப்பாய். இறுதியாக உனக்கு அமைதி கிடைத்துவிட்டது' என்று கூறியுள்ளார்.