சிவகார்த்திகேயன் படத்தை வெளியீடும் ஆமிர்கான்
ADDED : 894 days ago
இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் அயலான். ரகுல் பீர்த் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 24AM ஸ்டுடியோஸ், கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
சைன்ஸ் பிக்ஷன் கதைகளத்தை கொண்டுள்ள இந்த படத்தில் ஏலியன் வரும் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் டப் செய்து வெளியிட நடிகர் ஆமிர் கானின் தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. இப்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆமிர் கானின் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அயலான் வீடியோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.