உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 200 கோடி வைர நெக்லஸ் அணிந்து வந்த பிரியங்கா சோப்ரா

200 கோடி வைர நெக்லஸ் அணிந்து வந்த பிரியங்கா சோப்ரா

முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான பிரியங்கா சோப்ரா தான் தற்போது நகை அணியும் பெண்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 'மெட் காலா 2023' என்ற பேஷன் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்க தனது கணவர் நிக் ஜோனஸ் உடன் வந்த பிரியங்கா சோப்ரா 200 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ் ஒன்றை அணிந்து வந்துள்ளார்.

கருப்பு நிற நீளமான கவுன் ஆடையில் அவர் கழுத்தில் அணிந்திருந்த அந்த வெள்ளை நிற வைர நெக்லஸ் வந்திருந்த அனைவரின் கண்களைப் பறித்தது. தற்போது சமூக வலைத்தளங்களில் பலரது கண்களைப் பறித்து வருகிறது. அந்த வைர நெக்லஸ் அமெரிக்க ரூபாய் மதிப்பில் 25 மில்லியன் யுஎஸ் டாலர் என்கிறார்கள். நிகழ்ச்சிக்குப் பின்பு அந்த வைர நெக்லஸ் ஏலம் விடப்படுமாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !