ஒரு லட்சம் முத்துக்களால் ஆன ஆடை : தேவதையாக ஆலியா பட்
ADDED : 884 days ago
பாலிவுட்டின் முன்னணி நடிகை ஆலியா பட். கடந்தாண்டு இவருக்கு திருமணம் நடந்தது. சில மாதங்களுக்கு முன் குழந்தையும் பிறந்தது. தொடர்ந்து படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 'மெட் காலா 2023' என்ற பேஷன் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் பாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டார். நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸ் உடன் பங்கேற்றார். அதில் அவர் அணிந்த கருப்பு நிற ஆடையும், வைர நெக்லஸ் அனைவரின் கண்களை கவர்ந்தது.
மற்றொருபுறம் ஆலியா பட் அணிந்த ஆடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஒரு லட்சம் முத்துக்கள் பதித்த எம்பிராய்டரி ஆடையுடன் அவர் வலம் வந்தார். இந்த ஆடையை இந்திய வடிவமைப்பாளர் பிரபால் குருங் வடிவமைத்துள்ளார்.