நடிகராக மாறிய பாடகர் ஹரிஹரன்
ADDED : 892 days ago
இந்திய அளவில் பின்னணி பாடகர்களில் முதல் வரிசையில் இருப்பவர் ஹரிஹரன். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேலாக இப்போதும் ரசிகர்களை தனது குரலால் வசியம் செய்து கட்டிப்போட்டு வைத்துள்ள இவர் இன்னொரு பக்கம் ஆல்பம் பாடல்கள் மூலமாக தனது நடிப்பையும் வெளிப்படுத்தி வருகிறார். அதே சமயம் கடந்த 2005ல் குஷ்புவுடன் இணைந்து பவர் ஆப் உமன் என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் ஹரிஹரன்.
அதற்குப் பிறகு கிட்டத்தட்ட 18 வருடங்கள் கழித்து தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் தயாபார்தி என்கிற படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஹரிஹரன். விஜயகுமார் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை நேகா சக்சேனா நடித்துள்ளார்.