கிளாமர் படங்களால் லைக்குகளை அள்ளிய மிருணாள் தாக்கூர்
ADDED : 856 days ago
2022ம் ஆண்டில் தெலுங்கில் தயாராகி தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் ஆகி வரவேற்பைப் பெற்ற படம் 'சீதா ராமம்'. அப்படத்தின் மூலம் எண்ணற்ற ரசிகர்களைத் தன் வசம் பெற்றவர் படத்தில் கதாநாயகியாக நடித்த மிருணாள் தாக்கூர்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மிருணாள் நேற்று அவருடைய இன்ஸ்டா தளத்தில் சில கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். “என்னை சொர்க்கத்திலும் நீங்கள் பார்க்கலாம்,” எனப் பதிவிட்டிருந்த அந்த போட்டோக்கள் 14 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளன.
கடற்கரையில் இருந்து எடுத்த அந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் சுவாரசியமான கமெண்ட்டுகளைப் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், அந்தக் கடற்கரை மாலத்தீவு கடற்கரையா அல்லது எந்த நாட்டின் கடற்கரை என மிருணாள் எந்தத் தகவலையும் அளிக்கவில்லை.