தள்ளி போகும் ஷாருக்கான் படம்!
ADDED : 884 days ago
ஹிந்தி நடிகர் ஷாருக்கான் நடித்து தனது ரெட் சில்லிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வரும் படம் ஜவான். இந்த படத்தை நம்ம ஊர் இயக்குனர் அட்லீ இயக்குகிறார். இப்படத்தில் நயன்தாரா, பிரியாமணி, விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தை ஜூன் 2 அன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். இந்த நிலையில் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் மீதம் உள்ளதால் இப்போது வருகின்ற ஆகஸ்ட் 25 அன்று வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.