இனி அரசு இடத்தில் படப்பிடிப்பு
ADDED : 885 days ago
தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் வெளியிட்ட அறிக்கை: கடந்த 10 ஆண்டுகளாக அரசுக்கு சொந்தமான இடத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து தமிழக அரசிடம் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இதன்படி இனி அரசுக்கு சொந்தமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம். இதற்காக ஒற்றை சாளர முறையில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்தில் மட்டுமே முறையான அனுமதி கடிதம் கொடுத்து அனுமதி பெறலாம். இனிமேல், ராஜாஜி மண்டபம், தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புராதனச்சின்னங்கள், வள்ளுவர் கோட்டம், அரசு மனநலக்காப்பகம், மெரினா கடற்கரை போன்ற பல இடங்களில் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.