தெறி, மெர்சல் தான் எனக்கு பிடித்த படங்கள் - ஷாருக்கான்
ADDED : 892 days ago
நடிகர் ஷாருக்கான் பாலிவுட்டில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவரே நடித்து தயாரித்து ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் ஜவான். இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்கியுள்ளார். இப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது. ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரை வெளியிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களோடு உரையாடல் நடத்தினார் ஷாருக்கான். அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு மிகவும் பிடித்த அட்லீ படம் என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு தனக்கு பிடித்த அட்லீ படங்கள் தெறி மற்றும் மெர்சல் என்று தெரிவித்துள்ளார் ஷாருக்கான்.