உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தலைகீழாக யோகாசனம்! அழகின் அதிசயத்தை அனுபவிக்கும் ரம்யா பாண்டியன்!!

தலைகீழாக யோகாசனம்! அழகின் அதிசயத்தை அனுபவிக்கும் ரம்யா பாண்டியன்!!

பிக்பாஸ் போட்டியாளரும், நடிகையுமான ரம்யா பாண்டியன், சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தான் ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்கள், கிளாமர் போட்டோ சூட், ஆன்மிக பயணம் குறித்த பலதரப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருபவர், தற்போது தான் யோகா செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் டைட்டான வெள்ளை நிற உடை அணிந்து அவர் தலைகீழாக நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதோடு யோகாசனம் குறித்தும் அவர் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார்.

அதில், ‛யோகா என்பது கலை மட்டுமின்றி அறிவியல் ஆகும். பழங்காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் யோகாசனம் சுவாசத்தை உள்ளிழுத்தல், வெளியேற்றுதல், மூச்சை பிடித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதன் பலன்களை பெறுவதற்கு முறையாக அதனை செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு யோகாசனத்திலும் முறையான சுவாசம் ரத்தத்தை ஆக்சிஜன் ஏற்ற உதவுகிறது. முக்கியமாக மனரீதியாகவும் உடல் ரீதியாகவும், யோகாசனம் நமக்கு உற்சாகத்தை கொடுக்கிறது. இந்த யோகா பயிற்சியின் மூலம் அழகின் அதிசயத்தை அனுபவிக்க முடியும்' என்று பதிவிட்டு இருக்கிறார் ரம்யா பாண்டியன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !