மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
850 days ago
குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி'
850 days ago
கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான படம் 'தி கேரளா ஸ்டோரி'. விபுல்ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கி இருந்தார். அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு விரேஷ் ஸ்ரீவல்சா மற்றும் பிஷக் ஜோதி ஆகிய இருவர் இசையமைத்திருந்தனர். இப்படத்தில், கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக காட்டப்பட்டுள்ளது. இப்படத்துக்கு எதிராக கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வந்தன.
இந்த படத்திற்கு தடைவிதிக்க கோரிய வழக்குகள் அனைத்தையும் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தது. கேரளா, தமிழ்நாட்டில் படம் வெளியிடுவது தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்திற்கு ஏற்கெனவே உத்தர பிரதேசம், மத்திய பிரதேச மாநில அரசுகள் வரிவிலக்கு அளித்தது. இந்த வரிசையில் உத்தரகாண்ட் மாநிலத்திலும் முழு வரிவிலக்கு அளிக்கப்படும் என மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் சத்பால் மகாராஜ் நேற்று அறிவித்தார்.
இது தொடர்பாக மாநில முதல்வரான புஷ்கர் சிங் தாமி, ”தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உண்மை பேசியிருக்கிறது. ஆயுதமோ, இதர தளவாடங்களோ இல்லாது ஒரு நாட்டில் பயங்கரவாதத்தை பரவச் செய்வது எப்படி என்பதை அம்பலப்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு இந்தியரும் இந்த திரைப்படத்தை பார்ப்பது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சுமார் 30 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. 100 கோடி வரை வசூலிக்கும் என்கிறார்கள்.
850 days ago
850 days ago