உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாதனைகளைப் புரிந்து வரும் 'ஆதிபுருஷ்' டிரைலர்

சாதனைகளைப் புரிந்து வரும் 'ஆதிபுருஷ்' டிரைலர்

ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஆதிபுருஷ்'. ராமாயணக் கதையாக மோஷன் கேப்சரிங் முறையில் உருவாக்கப்படும் இப்படத்தின் டிரைலர் நேற்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் யு டியூபில் வெளியிடப்பட்டது.

24 மணி நேரத்திற்குள்ளாக பல புதிய சாதனைகளை இந்த டிரைலர் படைத்து வருகிறது. ஹிந்தி டிரைலர் 46 மில்லியன் பார்வைகளுடனும், தெலுங்கு டிரைலர் 9 மில்லியன், தமிழ் டிரைலர் 3 மில்லியன், மலையாளம் டிரைலர் 3 மில்லியன், கன்னட டிரைலர் 1.7 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது. 24 மணி நேர முடிவில் இது இன்னும் அதிகமாகலாம்.

இப்படத்தின் டீசர் வெளியான போது மோஷன் கேப்சரிங், விஎப்எக்ஸ் ஆகியவை தரமாக இல்லை என்ற விமர்சனங்கள் கடுமையாக எழுந்தது. ஆனால், டிரைலரில் அவையனைத்தையும் படக்குழு சரி செய்திருக்கிறது. பிரம்மாண்டமான விஷுவல் டிரீட் ஆக படம் அமையும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 3 டியில் அதைப் பார்க்க இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஜுன் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் தியேட்டர்களில் இப்படம் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !