தேவயானியின் மகள் +2 தேர்வில் எடுத்து மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?
ADDED : 899 days ago
வெள்ளித்திரையில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. சின்னத்திரையிலும் கோலங்கள் தொடரின் மூலம் அதிக புகழ் பெற்றார். இயக்குநர் ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்ட தேவயானிக்கு இனியா, ப்ரியங்கா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகளான இனியா நடந்து முடிந்த பொதுத்தேர்வில் +2 எழுதியிருந்தார். நேற்றைய தினம் +2 தேர்வு மதிப்பெண்கள் வெளியான நிலையில், தேவயானியின் மகள் இனியா 600க்கு 492 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார். இதனையடுத்து தேவயானியின் மகளுக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.