தனது குழுவினருக்கு பார்ட்டி கொடுத்த மணிரத்னம்
ADDED : 879 days ago
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி பத்து நாட்களுக்கு முன்பு வெளிவந்த 'பொன்னியின் செல்வன் 2' படம் 300 கோடி வசூலைக் கடந்துள்ளது. கல்கி எழுதிய நாவலைக் கடந்த பல வருடங்களாக யாருமே திரைப்படமாக உருவாக்க முயன்றும் முடியாத சூழலில் அந்த சாதனையை மணிரத்னம் புரிந்திருக்கிறார்.
இரண்டாவது பாகத்தின் சில கதாபாத்திர முடிவுகள் குறித்தும், கிளைமாக்ஸ் குறித்தும் சர்ச்சைகள் எழுந்தாலும் படத்தை ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் தனது குழுவினருக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் பார்ட்டி ஒன்றை வைத்துள்ளார் மணிரத்னம். அவரது குழுவினருடன், உதவியாளர்களும் அதில் கலந்து கொண்டுள்ளார்கள்.
அந்த புகைப்படத்தை படத்தின் 'ஒலிக் குழுவில்' பணி புரிந்த முன்னாள் குழந்தை நட்சத்திரமான ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி பகிர்ந்துள்ளார்.