உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் அப்டேட் இதோ!

கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் அப்டேட் இதோ!

ராக்கி பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம், 'கேப்டன் மில்லர்'. இந்த படத்தில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் ப்படத்தை தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது குற்றாலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று தயாரிப்பு நிறுவனம் நாளை காலை 10.25 மணிக்கு கேப்டன் மில்லர் முக்கிய அப்டேட் என்று தெரிவித்தனர். ஆனால், இன்று சொன்ன நேரத்தில் அப்டேட் வராமல் இன்று மாலை 4 மணிக்கு தள்ளி வெளியாகும் என்றனர். இப்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூன் மாதம் வெளியாகும், டீசர் ஜூலை மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !