விடாமுயற்சி படத்தில் இரண்டு வேடங்களில் அஜித்
ADDED : 931 days ago
துணிவு படத்தை அடுத்து மகிழ்திருமேனி இயக்கும் தனது 62 வது படமான விடாமுயற்சியில் அடுத்த மாதம் முதல் நடிக்க போகிறார் அஜித்குமார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அஜித் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன் காரணமாகவே இப்படத்திற்கான இரண்டு கதாநாயகிகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார் மகிழ் திருமேனி.
அந்த வகையில் திரிஷா, ஐஸ்வர்யா ராய், கங்கனா போன்ற நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவர்களில் த்ரிஷா ஒரு ஹீரோயினாக நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு வாலி, அசல், வில்லன், பில்லா உள்பட பல படங்களில் இரண்டு வேடங்களில் அஜித் குமார் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.