வீரன் படத்தின் அடுத்த அப்டேட்
ADDED : 960 days ago
ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‛வீரன்'. இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் ஆதி நடித்து இசையமைத்து வருகிறார். அவருடன் வினய் ராய், அதீரா ராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சூப்பர் ஹீரோ பாணியில் பேண்டஸி கலந்த கதையாக இந்தப்படம் உருவாகி உள்ளது. சமீபத்தில் இப்படம் ஜூன் 2 வெளியாகும் என்று அறிவித்தனர். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாடல் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இரண்டாம் பாடலுக்கு பப்பர மிட்டா என்று தலைப்பு வைத்துள்ளனர். வருகின்ற மே 13 மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.