சிவகார்த்திகேயன் பட இயக்குனருடன் இணையும் ரவி தேஜா
ADDED : 874 days ago
நடிகர் ரவி தேஜா தெலுங்கு சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த ராவணசுரா படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. ஆனாலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்தெடுத்தே நடித்து வருகிறார். தற்போது ஒரு இளம் இயக்குனர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் ரவி தேஜா. இப்படத்தை ஜதி ரத்னலு, பிரின்ஸ் படங்கள் இயக்குனர் கே.வி.அனுதீப் இயக்குகிறார். த்ரிஷா, தமன்னா ஆகிய இருவர்களிடமும் கதாநாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. மாஸ் என்டர்டெயினராக உருவாகும் இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மூலமாக தயாரிக்கிறார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.