சிறந்த அன்னை : ஐஸ்வர்யா ராஜேஷ் அம்மாவுக்கு கவர்னர் விருது
                                ADDED :  899 days ago     
                            
                             உலகம் முழுவதும் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கிண்டி கவர்னர் மாளிகையில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.  அப்போது, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களின் அம்மாக்களுக்கு அன்னையர் தின சிறப்பு விருது வழங்கப்பட்டது.
இதில் வறுமையான சூழ்நிலையில் இருந்து தன் மகளை தனி ஆளாக வளர்த்து நடிகையாக்கிய ஐஸ்வர்யா ராஜேஷின் தாயார்  நாகமணி அம்மையாருக்கு சிறந்த அன்னை விருதை கவர்னர் ஆர்.என்.ரவியும், அவரது மனைவி லட்சுமி ரவியும் இணைந்து வழங்கினார்கள். இவருடன் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் தாய் என்.நாகலட்சுமி, பாரா ஒலிம்பிக் கிரிக்கெட் வீரர் பொன்ராஜின் தாய் ஞானசுந்தரி, திருநங்கை கிரேஸ் பானுவின் தாய் ஹீனா உள்ளிட்ட 8 பேருக்கு சிறந்த அன்னை விருது வழங்கப்பட்டது.