ஜவான் படத்தை தொடர்ந்து மற்றொரு ஹிந்தி படத்தை இயக்கும் அட்லீ
ADDED : 881 days ago
இயக்குனர் அட்லீ தற்போது நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கியுள்ளார். இதை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால், அந்த படம் சற்று தள்ளி போவதால் அட்லீ மீண்டும் ஒரு ஹிந்தி படம் இயக்குகிறார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அந்த தகவலின் படி, பாலிவுட் இளம் நடிகர் வருண் தவான், இயக்குனர் அட்லீ இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்கி போகிறாராம். இந்த படத்தை சினி ஒன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து அட்லீயும் தயாரிக்கிறார். வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த வருட கோடை விடுமுறையில் படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.