குழந்தையின் முகத்தை ரசிகர்களுக்கு காண்பித்த பூர்ணா!
ADDED : 872 days ago
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, தகராறு, காப்பான் உட்பட பல படங்களில் நடித்தவர் பூர்ணா. துபாய் தொழிலதிபர் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்ட பூர்ணா, கடந்த ஆண்டு தான் கர்ப்பமாக இருந்தபோது போட்டோசூட் நடத்தி அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார். அதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் பூர்ணாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்த தகவலையும் அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது தனது கணவருடன் குழந்தையை கொஞ்சும் வீடியோ மற்றும் குழந்தையின் முகத்தையும் ரசிகர்களுக்கு காண்பித்துள்ளார் பூர்ணா. இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.