ஜெயம் ரவிக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள்!
ADDED : 880 days ago
நடிகர் ஜெயம் ரவி தற்போது பிஸியாக சைரன், எம்.ராஜேஷ் படங்களில் நடித்து வருகிறார். இதைதொடர்ந்து புதுமுக இயக்குனர் புவனேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிறது. இந்த படத்திற்கு ஜீனி என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக மூன்று நடிகைகள் நடிக்கவுள்ளனர். அதன்படி, இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி மற்றும் மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். மூன்றாம் நடிகைக்கான தேடல் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.