உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கபில்தேவ் உடன் இணைந்து பணியாற்றுவதுபெருமை: ரஜினி

கபில்தேவ் உடன் இணைந்து பணியாற்றுவதுபெருமை: ரஜினி



இந்தியாவை, முதன் முறையாக உலககோப்பையை வென்று பெருமைப்படுத்திய பழம்பெரும் , மிகவும் மரியாதைக்குரிய மற்றும் அற்புதமான மனிதர் கபில்தேவ்ஜியுடன் இணைந்து பணியாற்றுவது எனது பெருமையும் பாக்கியமும் ஆகும் என நடிகர் ரஜினிகாந்த் சமூக வலை தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யாரஜினிகா்நத் இயக்கும் லால் சலாம் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவும்சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். மும்பையில் நடைபெற்ற லால்சலாம் ஷூட்டிங்ஸ்பாட்டில் நடிகர் ரஜினிகாந்தும், கபில்தேவும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து இந்தியாவை, முதன் முறையாக உலககோப்பையை வென்று பெருமைப்படுத்திய பழம்பெரும் , மிகவும் மரியாதைக்குரிய மற்றும் அற்புதமான மனிதர் கபில்தேவ்ஜியுடன் இணைந்து பணியாற்றுவது எனது பெருமையும் பாக்கியமும் ஆகும் என நடிகர் ரஜினிகாந்த் சமூக வலை தளத்தில் பதிவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !