உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திரைப்பட விழாவா... இல்லை ஆடைகள் திருவிழாவா...? - நந்திதா தாஸ் காட்டம்

திரைப்பட விழாவா... இல்லை ஆடைகள் திருவிழாவா...? - நந்திதா தாஸ் காட்டம்

2023ம் வருடத்திற்கான கேன்ஸ் திரைப்பட திருவிழா தற்போது பிரான்சில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பாலிவுட்டில் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவிலிருந்தும் பிரபல நடிகைகள் சென்றுள்ளனர். கடந்த சில நாட்களாகவே இந்த விழாவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராயின் ஆடை அலங்காரம் குஷ்புவின் பாரம்பரிய பட்டுப்புடவை குறித்த விஷயங்கள் சோசியல் மீடியாவில் கேன்ஸ் திரைப்பட திருவிழா குறித்து பரபரப்பாக பேச வைத்தன.

அதே சமயம் அழகி புகழ் நடிகை நந்திதா தாஸ் நடிகைகளின் இந்த ஆடை அலங்காரம் குறித்து கூறும்போது, “இந்த வருடம் என்னால் கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. ஆனால் அங்கே நடப்பது திரைப்பட திருவிழா தானே தவிர ஆடை அலங்கார திருவிழா அல்ல என்பதை இங்கிருந்து செல்லும் நடிகைகள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதேசமயம் ஒரே ஒருவர் மட்டும் இந்த விழாவில் புடவை அணிந்து கொண்டு கலந்து கொண்டதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !