தனுஷ் 50வது படத்தில் நட்சத்திர பட்டாளம்
ADDED : 914 days ago
நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக மதுரை அருகே நடந்து வருகிறது. இதை தொடர்ந்து அவரது 50வது படத்தை அவரே இயக்கி, நடிக்கிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெய்ராம், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என கூறப்படுகிறது. இவர்கள் அல்லாமல் எஸ். ஜே. சூர்யா, சந்தீப் கிஷான் இருவரும் தனுஷிற்கு அண்ணன், தம்பி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. வடசென்னை பகுதியை மையப்படுத்தி உருவாகும் இந்த கேங்க்ஸ்டர் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.