ரகுல் உட்பட 4 ஹீரோயின்கள் நடித்த படம் ஓடிடியில் வெளியாகிறது
ADDED : 897 days ago
ரகுல் ப்ரீத்தி சிங், நிவேதா பெத்துராஜ், மேகா ஆகாஷ், மஞ்சிமா மோகன் இணைந்து நடித்துள்ள படம 'ப்பூ'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விஜய் இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இது ஒரு பேய் படம். இந்த படம் நாளை (27ம் தேதி) ஜியோ சினிமா என்ற ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தியேட்டர் வெளியீட்டுக்காக உருவான படம் திடீரென ஓடிடி தளத்தில் வெளியாவது ஏன் என்று தெரியவில்லை. முதலில் தமிழ், தெலுங்கில் மட்டும் வெளியாகும் இந்த படம் பின்னர், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகிறது. ஓடிடி தளத்தின் புரமோசனுக்காக இந்த படத்தை அந்த நிறுவனம் வாங்கி வெளியிடுவதாக கூறப்படுகிறது.