மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
829 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
829 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
829 days ago
தமிழில் சமுத்திரக்கனி இயக்கி, நடித்து ஓடிடி தளத்தில் வெளிவந்த படம் 'விநோதய சித்தம்'. அப்படத்தைத் தெலுங்கில் பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் நடிக்க ரீமேக் செய்து இயக்கியுள்ளார். ஜுலை 28ம் தேதி வெளியாக உள்ள அப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது.
வழக்கம் போலவே பவன் கல்யாணின் ஸ்டைலான தோற்றத்தை விமர்சித்த ரசிகர்கள் ஒரு படி கீழே போய் அவர் அணிந்திருந்த ஷுவைப் பற்றியும் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பிரெஞ்ச் கம்பெனி பிராண்டான அந்த ஷுவின் விலை 91 ஆயிரம் ரூபாய் என அதைப் பற்றி கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இப்படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர், பிரம்மானந்தம், ரோகிணி, சுப்பராஜு மற்றும் பலர் நடிக்கிறார்கள். 'உன்னைச் சரணடைந்தேன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'நாலோ', 'நாடோடிகள்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'சம்போ சிவ சம்போ', 'நிமிர்ந்து நில்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'ஜண்ட பை கபிராஜு', படங்களுக்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கும் நான்காவது தெலுங்குப் படம் 'ப்ரோ'.
'விநோதய சித்தம்' ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம். தெலுங்கு ரீமேக்கான 'ப்ரோ' தியேட்டர்களில் வெளியாக உள்ளது. ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு பவன் கல்யாண் நடித்து தெலுங்கில் வெளிவர உள்ள படம் இது.
829 days ago
829 days ago
829 days ago