இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் இளையராஜா - கமல் வாழ்த்து
ADDED : 869 days ago
இசையமைப்பாளர் இளையராஜா இன்று(ஜூன் 2) தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைக்கலைஞர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல் வெளியிட்ட பதிவில் : திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக் கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய உயரிய அண்ணன் இளையராஜா. இன்று பிறந்த நாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன்'' என தெரிவித்துள்ளார்.